#Breaking: எஸ்வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம் உறுதி.!
குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி! டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்; எத்தனை நாட்கள் தெரியுமா?
தமிழகத்தில் அரசின் சார்பாக நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்கள் அடுத்த மாதம் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநரிடம் வேலைநிறுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஒரு நாள் தமிழகத்தில் டாஸ்மாக் மூடப்பட்டாலே தமிழக அரசுக்கு வருமான இழப்பும், குடிமகன்களுக்கு கை நடுக்கமும் வந்து விடும். இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் அடுத்த மாதம் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக தகவல் வெளியாகியுள்ளன.
பணிவரன்முறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8,9 ஆம் தேதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநரிடம் வேலைநிறுத்தம் தொடர்பாக நோட்டீஸ் தரப்பட்டுள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் திருச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெற்ற நிச்சயம் தமிழக அரசிற்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்படும். மேலும் டாஸ்மாக்கை நம்பி வாழும் குடிமகன்களுக்கு பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.