96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மாணவிக்கு ஆபாச மெசேஜ் செய்த கெமிஸ்ட்ரி வாத்தி.. கேஸானதால் ராஜினாமா..! ஒத்த SS-ஆல் தண்டவாளம் ஏறிய வண்டவாளம்.!
பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய ஆசிரியர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், சோழபுரம் பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றுபவர் தங்கராஜ் (வயது 35). இந்நிலையில், இவர் 12ஆம் வகுப்பு பயின்று வரும் ஒரு மாணவிக்கு சில நாட்களுக்கு முன்பாக தகாத வார்த்தையில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதனை கண்ட மாணவியின் தங்கை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஆகாஷ் எனும் அவரது நண்பருக்கு அனுப்பியுள்ளார். மேலும், ஆகாஷ் இதனை வேறு சிலருக்கு அனுப்ப, அது சமூக வலைதளங்களில் தீயாக பரவ தொடங்கியது. இந்த சம்பவம் குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் ராமசுப்பிரமணியன் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
எனவே, பள்ளி ஆசிரியைகள் ஜாய்ஸ், ஜெகதா ஆகியோர் ஆசிரியர் தங்கராஜிடம் விசாரணை நடத்திய நிலையில், அவர் தான் மெசேஜ் அனுப்பியதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், 'நான் செய்தது தவறு, இனி அவ்வாறு எந்த ஒரு மாணவிக்கும் மெசேஜ் அனுப்ப மாட்டேன்' என்ற ஒரு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த நிலையில், தனது வேலையையும் விட்டு ராஜினாமா செய்துள்ளார்.
இருந்தபோதிலும் மேல் நடவடிக்கை எடுக்குமாறு பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியதால், தலைமையாசிரியர் ராமசுப்பிரமணியன் ராஜபாளையத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் மரியபாக்கியம் ஆசிரியர் தங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.