சிவசங்கர் பாபா பெற்றோர்கள் முன்னிலையில் மாணவிகளை கட்டிபிடிப்பார்.! ஆசிரியைகள் ஓப்பன் டாக்.!



teachers talk about shivasankar baba

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ ராமராஜ்யா என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. 72 வயதான இவர், கடந்த 20 ஆண்டுகளாக கேளம்பாகத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருகிறார். இவர் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. 

இதையடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன், காவல் ஆய்வாளர் ஜெயசங்கர் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு விசாரணையை மேற்கொண்டனர்.

இந்தநிலையில், பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சுஷில் ஹரி பள்ளி நிறுவனரான சிவசங்கர் பாபா சிபிசிஐடி காவல் துறையினரால் டெல்லியில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து சிவசங்கர் பாபாவை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, சிவசங்கர் பாபாவுக்கு டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

shivasankar baba

சிபிசிஐடி விசாரணை முடியும் வரை வதந்திகளை பரப்ப வேண்டாம். விசாரணையில் நிச்சயம் நல்ல முடிவு வரும். சிவசங்கர் பாபாவை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியதாக வந்த தகவல் தவறானது. சிவசங்கர் பாபா எங்கேயும் தப்பி ஓடவில்லை. சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளைத் தொடுவது, கட்டிப்பிடிப்பது ஆகியவை அனைவரும் முன்னிலையில் மட்டுமே நடக்கும், தனியாகவோ மறைவாகவோ நடப்பதில்லை. 

அவர் பெற்றோர்கள் முன்னிலையில் தான் மாணவிகளை கட்டிப்பிடிப்பார், ஒரு குருவாக தான் தொடுவார். அது நல்ல தொடுதலாக தான் இருக்கும். இரண்டு தரப்பிலும் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாபாவிற்கு ஆதரவாக பேசியுள்ளனர்.