96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
வீடியோ: இரத்தமின்றி குழந்தை நரபலி!! நடந்தது என்ன? முழு தகவல் இதோ..
தஞ்சாவூரில் 6 மாத பெண் குழந்தை தண்ணீர்த்தொட்டியில் மூழ்கடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் தாத்தா - பாட்டி மற்றும் மந்திரவாதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் நசுருதீன் - சாலிகா. இவர்களது 6 மாத பெண்குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்துவிட்டதாக கூறி பெற்றோர் அடக்கம் செய்துள்ளனர். இந்த தகவல் போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, குழந்தையின் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. குழந்தையின் தந்தை நசுருதீன் உடைய சித்தப்பா அசாருதீன் என்பவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து, அவர்கள் சலீம் என்ற மந்திரவாதியை அணுகியுள்ளனர். இரத்தமின்றி நரபலி கொடுத்தால் பிரச்சனை சரியாகிவிடும் என அந்த மந்திரவாதி கூறியதை அடுத்து, நசுருதீன் உடைய 6 மாத பெண் குழந்தையை அசாருதீனின் மனைவி தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அசாருதீன், அவரது மனைவி, மந்திரவாதி சலீம் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவமானது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.