கன்னியாகுமரியில் மாணவியின் உயிரைப் பறித்த செல்போன்... பெற்றோர் கதறல்.!



the-cell-phone-that-took-the-life-of-the-student-in-kan

கன்னியாகுமரி மாவட்டத்தில் செல்போன் பயன்படுத்தியதற்காக பெற்றோர் திட்டியதால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

குமரி மாவட்டத்தில் உள்ள மேலசாந்தி மங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த காந்தி மற்றும் செல்வி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள்.இவர்களின் மூத்த மகளான நீலா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து  வந்தார். இளைய மகள் செல்வி அங்குள்ள பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நிலா அடிக்கடி தனது செல்போனை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதற்கு அவரது தாய் கண்டிப்பு தெரிவித்து வந்திருக்கிறார்.

tamilnaduஇந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாக செல்போனை பார்த்திருந்திருக்கிறார் நிலா. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது தாய்  உறங்காமல் செல்போனை பார்த்துக் கொண்டிருந்ததற்காக நிலாவை திட்டி இருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் நிலா.

tamilnaduஇதனைத் தொடர்ந்து அனைவரும் உறங்கச் சென்ற பின் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார் நிலா. தீ பற்றி எரிந்ததால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த நிலாவை காப்பாற்ற பெற்றோர் முயற்சித்துள்ளனர். அதற்குள் தீக்காயம் உடல் முழுவதும் பரவி பரிதாபமாக இறந்தார். தங்களின் மகள் கண் முன்னே இறந்ததை பார்த்து கதறி துடித்தனர் அவரது பெற்றோர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்  நிலாவின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.