96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
வினையான விளையாட்டு: கிணற்றில் தவறி விழுந்த சிறுமி பரிதாப பலி..!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பகுதியில் வசித்து வரும் மருதுபாண்டியின் மகள் யாஷிகா இவர் ஆலம் பட்டியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
மருதுபாண்டி தம்பதியினர் பட்டுரில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோப்பில் கூலிவேலை செய்து வருகின்றனர். வேலைக்கு செல்லும்போது மூன்றாம் வகுப்பு படிக்கும் தனது மகளையும் அழைத்து சென்றுள்ளனர். நேற்று மாலை அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி யாஷிகா எதிர்பாராதவிதமாக தோட்ட கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
வேலை செய்துகொண்டிருந்த மருதுபாண்டி தம்பதியினர் வெகுநேரமாக தங்கள் மகளை காணாததால் தோப்பில் தேடியுள்ளனர் ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து மேலவளவு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் உள்ள கிணற்றில் இறங்கி சிறுமியை தேடி பார்த்தனர் அப்பொழுது கிணற்றில் இருந்து யாஷிகாவின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த விபத்து குறித்து மேலவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.