ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இளைஞர்களுக்கு போதைக்காளான் விற்ற சம்பவம்.. கைதான 3 ஆசாமிகள்.!
கொடைக்கானலில் சுற்றுலா சென்ற இளைஞர்களுக்கு போதைக்காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3 ஆசாமிகளை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவை சேர்ந்த 5 பேர் கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் பூண்டி கிராம வனப்பகுதியில் உள்ள விடுதியில் தங்கி போதைக்காளான் மற்றும் கஞ்சா உட்கொண்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் 2 பேர் மட்டும் போதையின் தாக்கத்தை அதிகரிக்க போதைக்காளான்களை தேடி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்று வழி மாறி 3 நாட்களாக தவித்து வந்துள்ளனர். இதனையடுத்து அவர்களை அந்த காட்டுப் பகுதிக்கு விறகு பொறுக்க சென்ற சிலர் மீட்டு காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
அப்போது அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்த அந்த 3 ஆசாமிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.