குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
காணாமல் போன பள்ளி சிறுமி.. சிறிது நேரத்தில் தண்டவாளத்தில் சடலமாக மீட்ட போலீசார்.. கதறி துடித்த பெற்றோர்.!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கார்த்திகேயபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் பாஸ்கர் - நந்தினி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற இவர்களது 10ம் வகுப்பு படிக்கும் மகள் வீடு திரும்பாததையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி விசாரித்துள்ளனர்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மகள் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சடைந்த பெற்றோர் குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் குடியாத்தம் அருகே உள்ள குருநாதபுரம் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் இளம் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த சடலத்தை கைப்பற்றி பார்த்த போது அது காணாமல் போன 10ம் வகுப்பு சிறுமி என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.