குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்; அடையாளம் கண்ட போலீசார்!..புகாரளித்த கணவருக்கு கிடுக்கிப்பிடி..!
சென்னை, திருவொற்றியூர், பூங்காவனபுரம் பகுத்யில் 1வது தெருவில் வசித்து வருபவர் மணிமாறன் (35). இவர் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். வாரத்தில் தனது ஒரு நாள் வீட்டிற்கு வந்து செல்வார் என்று கூறப்படுகிறது. இவரது மனைவி மைதிலி (34.) இவர் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 3 ஆம் தேதி எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்ற மைதிலி, தன்னுடன் வேலை செய்யும் ஜெய்சங்கர் என்பவரோடு மோட்டார் சைக்கிளில் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே வந்து இறங்கி உள்ளார். அப்போது அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த அவரது கணவர் மணிமாறன் இரண்டு பேரும் எங்கே சுற்றி விட்டு வருகிறீர்கள் என கேட்டு மைதிலியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மைதிலியை காணவில்லை என்று கடந்த 5 ஆம் தேதி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மணிமாறன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மணலி புதிய மேம்பாலம் அருகே உடல் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கிடந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மணலி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மணலி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உயிரிழந்தவர் காணாமல் போனதகாக புகாரளிக்கப்பட்ட தூய்மை பணியாளர் மைதிட்லி என்பதை அடையாளம் கண்டனர். இதனை தொடர்ந்து, அவரது கணவர் மணிமாறனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.