96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த காவலர்... ஏமாந்து விட்டதாக புகார் அளித்த இளம் பெண்...!
கல்யாணம் செய்து கொள்வதாக சொல்லி, காவலர் ஒருவர் ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டி பணம் பறித்து வருவதாக ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை மணலியில் வசிப்பவர் சரிதா (38). கணவரை பிரிந்து அவரது பிள்ளையுடன் வசித்து வருகிறார். இந் நிலையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக வேலை செய்து வரும் செல்லதுரை என்பவருக்கும் சரிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
செல்லதுரை மனைவி பிரிந்து வாழ்வதாக கூறி சரிதாவுடன் பழகி வந்துள்ளார். மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். எனவே சரிதா அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சரிதா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். இதனால் செல்லதுரை சரிதாவுடன் பிரச்சனை செய்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த சரிதா அவரைப் பற்றி விசாரித்த போது செல்லதுரை திருமணம் ஆனவர் என்றும், மேலும் வேறு சில பெண்களுடனும் அவருக்கு தொடர்பு இருந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து சரிதா அவரிடம் கேட்டபோது சரிதாவை அவதூறாக பேசி அவரை தாக்கியுள்ளார். அதன் பின்னர் தான் ஏமாற்றத்தை பட்டதை புரிந்து கொண்ட சரிதா, இது குறித்து சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதைதொடர்ந்து செல்லதுரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அது மட்டும் இன்றி இருவரும் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்து, சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டி சபிதாவிடம் பணம் பறித்த தாகவும், மேலும் கொலைமிரட்டல் விடுத்த செல்லதுரை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரிதா புகார் அளித்துள்ளார்.