96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தாய் இறந்து 11 மாசம் ஆச்சு.. திடீரென வீட்டில் வீசிய துர்நாற்றம்.. உள்ளே சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..
11 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த தாயின் உடலை தோண்டி எடுத்துவந்து மகன் வீட்டில் வைத்திருந்த சம்பவம பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. குறிப்பிட்ட இளைஞரின் தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்ட நிலையில், ஒரே மகனான அவர் அவரது தாயின் அரவணையில் வளர்ந்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் அவரின் தாயார் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார்.
தாய் மீது அதிக பாசம் வைத்திருந்த அவரது மகனால், தாயின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர், இறந்த தனது தாய் புதைக்கப்பட்ட இடத்தையே சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் அந்த நபரின் உறவுக்கார பெண் ஒருவர் அந்த இளைஞருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசவே, வீட்டிற்குள் சென்று பார்த்த அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. உடல் சிதைவுற்றநிலையில் சடலம் ஒன்று வீட்டிற்குள் இருப்பதை பார்த்த அவர், உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், 11 மாதங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட தனது தாயின் உடலை அந்த இளைஞர் தோண்டிவந்து தனது வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து உடலை மீண்டும் அடக்கம் செய்த போலீசார், இளைஞரை மீட்டு மனநல காப்பகத்தில் சேர்த்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 மாதங்களுக்கு முன் இறந்த தாயின் உடலைத் தோண்டி எடுத்து வந்து வீட்டில் வைத்திருந்த மகன்.!#Perambalur | #Mother | #Son | #DeadBody pic.twitter.com/36tRArMJfF
— Polimer News (@polimernews) December 27, 2021