96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
நிலத்தகராறில் பெண்ணின் மீது வெந்நீரை ஊற்றிய பயங்கரம்.. திருவாரூர் அருகே பேரதிர்ச்சி சம்பவம்.!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல், வேம்பனூர் சாலையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரின் மனைவி அருள்செல்வி (வயது 30). செந்தில் குமாரின் அண்ணி பத்மாவதி (வயது 32). செந்தில் குமார் மற்றும் அவரின் அண்ணன் இடையே சொத்து தகராறு இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் பத்மாவதி தண்ணீரை கொதிக்க வைத்து அருள் செல்வியின் மீது ஊற்றியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த அருள்செல்வி குடவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக அருள்செல்வி கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் பத்மாவதி, அவரின் கணவர் உட்பட 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், பத்மாவதியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
வெந்நீர் ஊற்றியதில் அருள்செல்வியின் வலது கை, வலது கால் மற்றும் முதுகு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சொத்து தகராறில் பெண்ணின் மீது வெந்நீரை ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.