குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
பல அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல்.. ஸ்தம்பிக்கப்போகும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை..!
கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் திருவெண்ணெய் நல்லூருக்கு உட்பட்ட 25 ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும், திருநாவலூர் ஒன்றியத்தை விழுப்புரத்தோடு இணைக்கவும், திருவெண்ணெய்நல்லூரை சட்டப்பேரவை தொகுதியாக அறிவிக்கவும் உள்ளூர் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற்னர்.
நேற்று அரசூரில் இதுதொடர்பான கூட்டம் விழிபுனராம் இணைப்புக்குழு மற்றும் அனைத்துக்கட்சியினர் சார்பில் செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லலூர் ஒன்றியம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 25 ஊராட்சியை கள்ளக்குறிச்சியுடன் இணைக்க கூடாது.
முன்னதாகவே மாவட்ட வரையறை செய்யப்பட்ட மாவட்ட எல்லைப்பகுதியில் சில திருத்தங்கள் செய்து கூவாகம், கொரட்டூர், இருந்தாய், வேலூர், திருநாவலூர் ஒன்றியத்தை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும்.
திருநாவலூரை தாலுகாவாக அறிவிக்க வேண்டும். திருவெண்ணெய்நல்லூர், திருநாவலூர் ஒன்றியங்களை இணைந்து சட்டமன்ற தொகுதி அறிவிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனைத்தொடர்ந்து இன்று கிராமங்களில் கருப்புகொடியேற்றி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவும், திங்கட்கிழமை ஊராட்சிகளில் மனு அளிக்கவும், வெள்ளிக்கிழமை கிராமத்தில் கருப்புகொடியேந்தி கண்டா ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்காத பட்சத்தில், 24ம் தேதி அரசூர் தேசிய நெடுஞ்சாலையில் மாபெரும் சாலைமறியல் போராட்டம் நடத்தவும், ஆட்சியரிடம் மனு கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.