பழைய சாதத்துடன் முட்டை சாப்பிட்ட 15 வயது சிறுவன் பலி, தாய் கவலைக்கிடம்.. ஓட்டப்பிடாரத்தில் சோகம்.!



Thoothukudi Ottapidaram Mother Son Eating food Poison Son Died Mother Critical

இரவில் உறங்குவதற்கு முன்னர் தாய் - மகன் பழைய சாதம், முட்டை சாப்பிட்ட நிலையில், வயிற்று வலி ஏற்பட்டு மகன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம், மேல லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரின் மனைவி கனகலட்சுமி. இவர்கள் இருவருக்கும் ரஞ்சித் என்ற 15 வயதுடைய மகன் இருக்கிறார். ரஞ்சித் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி இரவில் கனகலட்சுமி மற்றும் அவரின் மகன் ரஞ்சித் ஆகியோர், வீட்டில் இருந்த பழைய சாதம் மற்றும் முட்டையை சாப்பிட்டு உள்ளனர். நள்ளிரவு நேரத்தில் இருவருக்கும் திடீரென வயிற்று வலி ஏற்பட்டு அலறித்துடித்துள்ளனர். 

பதறிப்போன கணவர் அருணாச்சலம் இருவரையும் மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர்.

Thoothukudi

இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரஞ்சித் நேற்று நள்ளிரவு நேரத்தில் உயிரிழந்தார். கனகலட்சுமி உயிருக்கு போராடி வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஓட்டப்பிடாரம் காவல் துறையினர், உணவு ஒவ்வாமை காரணமாக மகன் உயிரிழந்தனரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரஞ்சித்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையின் முடிவில் அவரின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.