96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தென்னகமே அதிர்ச்சி.. நிலத்தகராறில் பெண் உட்பட 3 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை..!
சர்ச்சைக்குரிய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் முயற்சியின் போது இருதரப்பு மோதல் நடந்து 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து, நாஞ்சான்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்மணி வசந்தா. இவரின் உறவினர்கள் ஜேசுராஜ் மற்றும் மரியாஜ். இவர்களின் குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்ததாகத் தெரிய வருகிறது.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய அந்த நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ஒரு தரப்பு முடிவு செய்துள்ளது. அதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருதரப்பு இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்றதாக தெரியவரும் நிலையில், இரு தரப்பும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இந்த தாக்குதலில் வசந்தா தரப்பினர் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மொத்தமாக 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில், வசந்தா மற்றும் அவரின் இரண்டு உறவினர்கள் ஜேஜுராஜ், மரியராஜ் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. நிலத்தகராறில் பெண் உட்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள தென்மாவட்டத்தை அதிர வைத்துள்ளது.