96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சட்டக்கல்லூரி கல்லூரி மாணவி காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் : தாய்-மகள் கொலை முயற்சி.. ஒரு(தறு)தலைக்காதலால் பயங்கரம்.!
சட்டக்கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த வழக்கறிஞர், அரசுத்தரப்பு வழக்கறிஞர் மற்றும் அவரின் மகளை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் நகரில் உள்ள மகிளா நீதிமன்றத்தில், அரசுத்தரப்பு வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் ஜமீலா பானு (வயது 42). இவரின் மகள் அமீர்நிஷா (வயது 20). இவர் சேலம் சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கிறார். திருப்பூரில் இருக்கும் தனது அலுவலகத்தில் ஜமீலா பானு தனது பணிகளை கவனித்து வந்த நிலையில், அவருடன் அமீர்நிஷாவும் இருந்துள்ளார். அப்போது அலுவலகத்திற்கு வந்த இளைஞர், அரசு வழக்கறிஞர் ஜமீலா மற்றும் அவரின் மகள் அமீர்நிஷாவை சரமாரியாக வெட்டி தப்பி சென்றுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த இருவரும் அலறித்துடிக்கவே, இரத்த காயத்துடன் உயிருக்கு போராடிய இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், மருத்துவமனைக்கு விரைந்து விசாரணை செய்தனர். விசாரணைக்கு பின்னர் இருவரையும் அரிவாளால் வெட்டிச்சென்ற அப்துல் ரஹ்மான் (வயது 25) என்ற இளைஞரை கைது செய்தனர்.
இவரிடம் நடைபெற்ற விசாரணையில் ஜமீலாவின் மகள் நிஷா படித்து வரும் சேலம் சட்டக்கல்லூரியில் அப்துல் ரஹ்மான் சட்டம் பயின்றுள்ளார். வழக்கறிஞராக பணியை தொடங்கிய அப்துல், மூத்த வழக்கறிஞரிடம் உதவியாளராக இருந்துள்ளார். சட்டக்கல்லூரியில் ஒருதலைப்பட்சமாக நிஷாவையும் காதலித்து வந்துள்ளார். தனது காதலையும் வெளிப்படுத்தி இருந்தாலும், அமீர்நிஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேற்படி, தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததால், ஒருகட்டத்தில் அமீர்நிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டு சிறைக்கு சென்ற அப்துலுக்கு ஜாமின் கிடைக்கப்பெற்ற நிலையில், வெளியே வந்தது தாய் - மகளை கொலை செய்யும் எண்ணத்திற்கு சென்ற அப்துல் ரஹ்மான் தாய், மகளை கொலை செய்ய முயற்சித்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் பலத்த வெட்டுக்காயத்துடன் தப்பித்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொலை முயற்சியை செய்துவிட்டு கேரளா தப்பி சென்ற அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.