ஹாய் அனுப்பாதீங்க; வேண்டுகோள் வைத்த தமிழ்நாடு மின்சார வாரியம்..! காரணம் இதுதான்..!



TNEB Request to Consumers 

 

தமிழ்நாடு மின்சார வாரியம், பயனர்களின் தகவல் மற்றும் அவர்கள் மின் கட்டணம் செலுத்தும் முறைகளை தொடர்ந்து டிஜிட்டல் மயமாக்கி வருகிறது. அதன் ஒருபகுதியாக வாட்சப் மூலமாக மின் கட்டணம் செலுத்தலாம் என்ற அறிவிப்பும் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. 

ஹாய் அனுப்பாதீங்க

இதற்கு மின் வாரியத்தின் எண்ணுக்கு 'ஹாய்' என்ற மெசேஜை பலரும் அனுப்பி வித்தனர். இதனிடையே, ரீடிங் எடுத்ததும் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தியவர்களுக்கு மின்கட்டணம் குறித்த லிங்க் பகிரப்படும். 

இதையும் படிங்க: ரூ.8 இலட்சம் மின் கட்டணத்தால் அதிர்ந்துபோன விவசாயி; அதிகாரிகள் தந்த விளக்கம்.!

இந்த விஷயம் நுகர்வோரின் பயன்பாடுகளை பொறுத்து தொடர்ந்து மேம்படுத்தப்படும். இதனால் மின்வாரியத்தின் வாட்சப் எண்ணுக்கு ஹாய் என மெசேஜ் அனுப்பி பேச முயற்சிக்க வேண்டாம் என மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: மின்கம்பிகளை அகற்ற ரூ.9 ஆயிரம் லஞ்சம் கேட்ட அதிகாரிகள்; கையும் களவுமாக சிக்கிய பின்னணி.!