கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
தமிழ்நாடு: பேஸ்புக்கில் ஆ., பேச்சு., பணம் பறிப்பு..! 100 க்கும் மேற்பட்ட பெண்களை., கெஞ்சி கதறிய பெண்கள்.. பரபரப்பு தகவல்.!
100 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்த கயவன் ஆரணி அருகே கைது செய்யப்பட்டுள்ளான். விசாரணையின் போது உண்மை தெரியாமல் கயவனுக்கு தொடர்பு கொண்ட பெண்களிடம் அதிகாரிகள் ஆலோசனை கூறியபோது, அவர் நல்லவர் என பெண்கள் சான்றிதழ் கொடுத்து அதிகாரிகளையே அதிரவைத்துள்ளனர்.
முகநூலில் கணக்கு தொடங்கி, பிற இளைஞர்களின் புகைப்படத்தை பதிவு செய்து 100 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, காதல் வலையில் விழவைத்து மிரட்டி இலட்சக்கணக்கில் பணம் பிரித்த புகாரில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை சேர்ந்த பயாஸ் என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் நடந்த விசாரணையில், பயாஸ் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களோடு சமூக வலைத்தளம் வாயிலாக பேசி ஏமாற்றியது அம்பலமானது. முதலில் பெண்களிடம் நண்பர்கள் போல பேசும் பயாஸ், தன்னை வளர்ந்து வரும் குட்டி தொழிலதிபர் போல பாவித்து, பெண்களை மூளைச்சலவை செய்து பணம் பறித்துள்ளார்.
மேலும், சில பெண்கள் அந்தரங்கம் தொடர்பாக பேசும்போது, அதன் ஆடியோவை பதிவு செய்துவைத்து கொண்டும் உல்லாச வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். பயாசுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில், அதனை மறைத்து சமூக வலைத்தளம் மூலமாக 100 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி இருக்கிறார்.
விசாரணையின் போதே பயாஸின் செல்போனுக்கு பல தொடர்பு கொண்ட நிலையில், போனை எடுத்து காவல் துறையினர் அறிவுரை கூறியுள்ளனர். இதில், சில பெண்கள் பயாஸை நல்லவர் என்றும் தெரிவித்து அதிகாரிகளை அலட்சியப்படுத்தியுள்ளனர். ஒரு பெண்மணி அவர் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. நான் அவரை திருமணம் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பயாஸின் மூளைச்சலவையில் சிக்கிய பெண்கள் அவரை எவ்வுளவு நம்பி இருக்கின்றனர். அதனை மூலதனமாக வைத்து எப்படி மோசடி செய்திருக்கிறார் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக பெண்கள் பேசுவதுதான் அங்கு பரிதாபத்திற்கு உரியதாக மாறியுள்ளது.