குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
கேக்கிலுமா துர்நாற்றம்?.. உயர்தர ஹோட்டலில் கெட்டுப்போன கேக் விற்பனை.. சிறுமி வாந்தி., பெற்றோர் போராட்டம்.!
கெட்டுப்போன கேக் விற்பனை செய்த பேக்கரி திருவாண்ணாமலையில் மூடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகே உயர்தர ஹோட்டல் அசோக் & பேக்கரி செயல்பட்டு வருகிறது. கடந்த திங்கள்கிழமை மாலை நேரத்தில், அங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் ஆதம் என்ற பெண்மணி தனது 5 வயது மகளின் பிறந்தநாளை கொண்டாட கேக் வாங்கி வந்துள்ளார்.
வீட்டில் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு முதலில் சிறுமி சாப்பிட்ட நிலையில், கேக்கை வாயில் வைத்த மறுநொடிய சிறுமி வாந்தி எடுத்துள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர் கேக்கை சோதனை செய்தபோது, அது அழுகிய நிலையில் கெட்டுப்போய் இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, அசோக் பேக்கரிக்கு மீண்டும் கேக்கை எடுத்து சென்ற பெற்றோர், ஊழியர்களிடம் முறையிட்ட போது சரிவர பதில் அளிக்கவில்லை. ஆத்திரமடைந்த பெற்றோர் உணவக வாயிலில் அமர்ந்து போராட, தகவல் அறிந்த அவரின் உறவினர்களும் வந்து சேர்ந்தனர்.
மேலும், அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்களும் தகவலை அறிந்து தங்கள் பங்கிற்கு குரலை உயர்த்த, நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு டக்வல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கேக் உட்பட பிற இனிப்பு & கார வகைகளின் மாதிரியை சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கேக் கெட்டுப்போய் இருந்ததும் உறுதி செய்யப்பட்டதால் ஹோட்டலுக்கு பூட்டு போடப்பட்டது.