திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கணவன் இறந்த சில நாட்களில் தூக்கில் தொங்கிய கர்ப்பிணி மனைவி; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம், கொளத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் அஜித் குமார். இவர் காவலராக வேலை பார்க்கிறார். புதுச்சேரியை சேர்ந்தவர் திவ்யபாரதி (வயது 23). இவர்கள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. தம்பதிகளுக்கு சர்வேஷ் என்ற ஒரு வயதுடைய மகன் இருக்கிறார்.
மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தம்பதிக்கு கூடுதல் மகிழ்ச்சியை தரும் வகையில், திவ்யபாரதி இரண்டாவது முறையாக கருத்தரித்து நான்கு மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார். இதனிடையே, கடந்த ஜூன் 28ம் தேதி அஜித் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் இதனால் கணவரை இழந்த சோகத்தில் திவ்யபாரதி மிகுந்த மனவருத்தத்துடன் இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: விரட்டிவிரட்டி காதலிக்கச்சொல்லி தொல்லை; போக்ஸோவில் கம்பி எண்ணும் இளைஞர்.!
கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை
இதனிடையே, நேற்று வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அச்சமயம் மகளின் அறைக்கு எதிர்பாராத விதமாக தாய் சென்ற நிலையில், அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கர்ப்பிணியை மீட்டனர். அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி திவ்யபாரதி, வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த கலசப்பாக்கம் காவல்துறையினர், திவ்யபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது. கணவன் தற்கொலை செய்த விரக்தியில், மனைவியும் உயிரை மாய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பைக் ஸ்டண்டில் மாஸ் காட்ட நினைத்து பீஸ் போன இளசுகள்; கொத்தாக தூக்கிய போலீஸ்.!!