திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விரட்டிவிரட்டி காதலிக்கச்சொல்லி தொல்லை; போக்ஸோவில் கம்பி எண்ணும் இளைஞர்.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு, வெம்பாக்கம் தாலுகா, சுமங்கலி கிராமத்தில் வசித்து வருபவர் கருணாகரன் (24). அங்குள்ள பகுதியில் 16 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
தினமும் மாணவி தனது கல்லூரிக்கு சென்றுவரும் நிலையில், மாணவி வீட்டில் இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் போதெல்லாம், கருணாகரன் சிறுமியை பின்தொடர்ந்து தான் உன்னை காதலிக்கிறேன் என தொந்தரவு செய்து வந்துள்ளார்.
போக்ஸோவில் கைதான குற்றவாளி
மாணவி கருணாகரனை நிராகரித்து கேட்காத இளைஞர், தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதனால் ஒருகட்டத்திற்கு மேல் விரக்தியடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் தகவலை தெரியப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: முதல் மனைவியை மறந்து வேறொரு பெண்ணுடன் தார்மீக காதல்; திருமணம் முடிந்து அம்பலமான குட்டு.. வில்லங்கமான சம்பவத்தால் கம்பி எண்ணும் காவலர்.!
இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கருணாகரனை கைது செய்தனர். அவரின் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இளம்பெண்ணை சீரழித்த இராணுவ வீரர்; திருமணத்திற்கு மறுத்தால் காவல் நிலையம் முன் மோதல்.!