சூறைக்காற்றுடன் சென்னையை புரட்டியெடுத்த கனமழை.!



TN Chennai Rains Yesterday Night 


தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு போன்றவற்றால் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. 

மேலும், வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் தரைக்காற்றுக்கான எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு இருந்தது. 

வெளுத்து வாங்கிய கனமழை

இந்நிலையில், நேற்று இரவு முதலாகவே சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடியவிடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இதனால் ஒருசில இடங்களில் மரக்கிளைகள் சாலையில் விழுந்தன. 

இதையும் படிங்க: #Breaking: இரவு 8 மணிவரை வெளுத்து வாங்கப்போகும் கனமழை; ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

சென்னையில் உள்ள கொளத்தூர், மாதவரம் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டன. தரைக்காற்று வீசியதால் மரங்கள் சேதமடைந்த நிலையில், சாலைகளில் ஆங்காங்கே மழை நீரும் தேங்கி இருக்கிறது. 
 

இதையும் படிங்க: #Breaking: 29 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!