திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஏதும் இல்லாத வெற்று அறிக்கையே நிதிநிலை அறிக்கை: பட்ஜெட் தாக்கல் 2024-க்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் விமர்சனம்.!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் 2024 தாக்கல் செய்தார். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வரவேற்று பேசியுள்ள பட்ஜெட்டை, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தால், இந்த பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கவனிக்கப்பட்டது. பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், "இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜக அரசு சொல்லிக் கொள்ளும் அளவு எந்த சாதனையும் செய்யவில்லை.
தனது ஆட்சி காலத்தை முடித்துவிட்டு விடைபெறும் நேரத்தில், தனது இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. எடை போட்டு பார்க்க ஏதும் இல்லாத வெற்று அறிக்கையே இந்த பட்ஜெட். கடந்த கால சாதனை என்பதை நிதிநிலை அறிக்கை கூறவில்லை.
நிகழ்கால பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் இல்லை. எதிர்கால பயன்கள் குறித்து உத்திரவாதம் தரும் வகையிலும் இல்லை. ஏழை மக்கள் வருமான உச்சவரம்பு அதிகரிப்பு குறித்து எதிர்பார்த்தும் இல்லை. ஒட்டுமொத்தமாக ஏதும் இல்லாத அறிக்கையை நிதி அறிக்கை என நிதி அமைச்சர் வாசித்து இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.