திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழ்நாடு ஆளுநர் சென்னை திரும்பும் பாதையில், தனியார் பேருந்து - லாரி மோதி பயங்கர விபத்து; காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு.!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தென்தமிழக மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு இன்று சென்னை திரும்புகிறார். மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு அவர் வருகிறார்.
இந்நிலையில், ஆளுநர் மதுரை விமான நிலையத்திற்கு வரும் வழியில் விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை சின்ன உடைப்பு பகுதியில் சுண்ணாம்பு கல் பாரம் ஏற்றிய லாரி வந்துகொண்டு இருந்தது.
இந்த லாரிக்கு பின்புறம் அருப்புக்கோட்டையில் இருந்து 40 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்ட தனியார் பேருந்து வந்துள்ளது. லாரி சின்ன உடைப்பு பகுதியில் வரும்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதனால் லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒருபுறமாக திரும்பி கவிழ்ந்துள்ளது. அதன் பின்னால் வேகமாக வந்த பேருந்து லாரியின் மீது மோதி சாலை நடுவில் ஏறி நின்றது.
விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 4 பெண்கள் உட்பட 12 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் போக்குவரத்தை சீர்படுத்தி வருகின்றனர். காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.