தமிழக அரசு அறிவித்துள்ள புதிய ஆஃபர்! பிளாஸ்டிக் பொருட்களை ஸ்மார்ட் டஸ்பினில் போட்டால் ஆஃபர் கூப்பன்!



tn-govt-provides-offer-coupons-for-using-smart-dustbin

தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பதற்காக 'ஸ்மார்ட் டஸ்பின்' எனும் புதிய ரக குப்பைத்தொட்டியை அறிமுகம் செய்யவுள்ளது. இதில் பிளாஸ்டிக் கழிவுகளை போட்டால் சலுகை கூப்பன் கிடைக்குமாம். 

தமிழக அரசு கடந்த ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழலை பாதிக்கும் பல பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு தமிழகம் முழுவதும் வெகுவாக குறைந்துள்ளது. 

tn goverment

இந்நிலையில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. நவீன "Smart Dustbin" எனப்படும் குப்பைத்தொட்டியை பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பது தான். 

இந்த நவீன "Smart Dustbin"-ல் சேகரிக்கப்படும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பாட்டில் & குளிர்பான அலுமினிய டின்களுக்கும் Reverse Vending Machine மூலம் சலுகை கூப்பன்கள் வழங்கப்படும். இந்த சலுகை கூப்பன்களைக் கொண்டு, அதில் குறிப்பிட்ட வணிக நிறுவனங்களில் பொருட்களை சலுகை விலையில் மக்கள் பெறலாம்.