96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
நான் கிறிஸ்துவன்., சங்கிகளுக்கு வயிறு எரியும் - கிறிஸ்துமஸ் பெருவிழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சரவெடி பேச்சு.!
நாங்கள் பேசுவதை கேட்டு சங்கிகள் கதறுவார்கள். ஆனால், நாம் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறோம் என உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் பேசினார்.
சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அனைவர்க்கும் எனது கிறிஸ்துமஸ் பெருவிழா வாழ்த்துக்கள். அனைவரும் திராவிட மாடல் ஆட்சி என்று கேட்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அல்லேலூயா கூறி வாழ்த்து தெரிவித்தால் அதுவே திராவிட மாடல் ஆட்சி. ரம்ஜானுக்கும் மிகப்பெரிய திருவிழா நடத்தினார்.
அவர் எப்போதும் கழுத்தில் மாலை அணிவித்து இருப்பவர். இதுவே சமூக நீதி ஆட்சி. இதையே அண்ணா, பெரியார், கலைஞர், பேராசிரியர் ஆகியோர் கற்றுக்கொடுத்தார். நானும் கிருத்துவன் என கூறிக்கொள்வதில் பெருமைகொள்கிறேன். இன்று சங்கிகளின் கூட்டத்திற்கு எரியும். அமைச்சர் சேகர் பாபு சென்று அல்லேலூயா கூறுகிறார்.
உதயநிதி சென்று நான் கிருத்துவன் என்கிறார் என சங்கிகள் கதறுவார்கள். நான் முஸ்லீம் என்றும் கூறுவேன். நான் எழும்பூர் தம்போஸ்க்கோ பள்ளியில் படித்தேன். லயோலா கல்லூரியில் பட்டம் பெற்றேன். காதலித்து கிருத்துவ பெண்ணை மணந்தேன். அந்த பெருமையோடு உங்களை கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெருமைகொள்கிறேன்.
உதயநிதி எப்படி அமைச்சராகலாம் என கழகத்தின் மீதும், தமிழ்நாடு அரசின் மீதும் திடீர் பாசம் பலருக்கும் வந்துள்ளது. அவர்கள் அனைவர்க்கும் நன்றிகள். அமைச்சர் சேகர்பாபு 2000 மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அவர் சேகர் பாபு என்பதை விட, தலைவரால் செயல்பாபு என்றே பலமுறை போற்றப்பட்டார்" என்று பேசினார்.