மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாதத்தின் முதல் நாளே கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
பெரும்பாலான பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக தங்கம் விளங்கி வருகிறது. அதிலும் தமிழ்நாடு மற்றும் தென் மாவட்ட பெண்கள் மத்தியில் தங்கத்தின் மீதான மோகம் அதிகம் என்றே கூறலாம். இந்நிலையில் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு சற்று குறைந்த விலை இன்று திடீரென அதிகரித்துள்ளது.
அதன்படி தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து இல்லத்தரசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹6,420-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராமுக்கு ₹10 அதிகரித்து ₹6430க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ₹80 அதிகரித்து ₹51,440-க்கு விற்கப்படுகிறது.
அதேபோல் வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து 91.70 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 91,700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க: இல்லத்தரசிகளை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன தெரியுமா.?
இதையும் படிங்க: நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர்கள் சண்டை; பரபரப்பான சைதாப்பேட்டை நீதிமன்றம்.!