குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
கவனக்குறைவால் நேர்ந்த சோகம்.. மின்வாரிய ஊழியர் பலி.. அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்..!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இடையன்வயல் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோவிலூர் அருகே கச்சிரான்பட்டி பகுதியில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்தப் பழுதை சரி செய்வதற்காக அஜித் குமார் மற்றும் அவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் அங்கு சென்று உள்ளனர். அப்போது மின்மாற்றியில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அஜித்குமார் பலியானார்.
இதனையடுத்து பணியின் போது கவனக்குறைவாக இருந்ததாக மின்வாரிய ஊழியர்கள் ஐயப்பன், செல்லதுரை, சொக்கலிங்கம் ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து ஆலங்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.