96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
திரைப்பட பாணியில் பரபரப்பு சம்பவம்.. நடுரோட்டில் அரிவாளுடன் விரட்டிவிரட்டி வெட்டு.. பரபரப்பு வீடியோ வைரல்.!
கணவரை பிரிந்து வாழும் பெண்ணிடம் பழையவரை கணவன் ஓடஓட விரட்டி வெட்டிய பரபரப்பு சம்பவம் திருச்சியில் நடைபெற்றுள்ளது.
திருச்சியில் மாவட்டத்தில் உள்ள தேவதானம் பகுதியில் வசித்து வருபவர் சந்துரு. இவரின் மனைவி சத்யா. தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இருவரும் கடந்த 2 ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார். இவருக்கும், சந்துருவின் மனைவியான சத்தியாவிற்கும் இடையே நட்பு ஏற்பட்டு பேசி வந்ததாக தெரியவருகிறது.
இந்த தகவலை அறிந்த சந்துரு, அரிவாளை எடுத்து சிவகுமாரை வெட்டுவதற்கு நடுரோட்டில் துரத்தி இருக்கிறார். சிவகுமாரின் உடலில் வெட்டுக்காயமும் விழுந்த நிலையில், அவர் உயிரை கையில் பிடித்து ஓட்டம் பிடித்தார்.
இதனைக்கண்டு பதறிப்போன வாகன ஓட்டிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சந்துருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.