குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
திரைப்பட பாணியில் டைவடித்து, தலைகுப்பற கவிழ்ந்து அப்பளமாக நொறுங்கிய கார்.. பரிதாப பலி.!
நண்பரை வெளிநாட்டுக்கு வழியனுப்பிவிட்டு வீட்டிற்கு வந்த நபர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம் பள்ளிக்கரணை அருகே நடந்துள்ளது.
திருச்சியை சேர்ந்த முகுந்தன் (வயது 24), சென்னையில் உள்ள திருவான்மியூர், நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் நண்பர் சிவகுமார் என்பவருடன் வாடகை வீட்டில் தங்கியிருக்கிறார். முகுந்தன் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பட்டம் பெற்றுள்ளதால் வேலை தேடி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை சிவகுமார் வெளிநாடு புறப்பட்ட நிலையில், முகுந்தன் நண்பர் சிவகுமாரை காரில் விமான நிலையத்திற்கு அழைத்து வந்து, நண்பரை வெளிநாட்டிற்கு வழியனுப்பி வைத்துள்ளார். பின்னர், காரில் நீலாங்கரைக்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார்.
இவர், பல்லாவரம் - துரைப்பாக்கம் 200 அடி சாலையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் சென்றுகொண்டு இருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் சென்று பள்ளத்தில் பலமுறை உருண்டு தலைகுப்பற விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், அப்பளம் போல நொறுங்கிய கார், கரப்பாண்பூச்சி போல கவிழ்ந்து கிடந்தது. மேலும், காரின் முன்பக்க பாகங்கள் துண்டாகின. காரில் இருந்த முகுந்தன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார்.
விபத்து தொடர்பாக தகவல் அறிந்த பள்ளிக்கரணை காவல் துறையினர் முகுந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.