தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்த 25 க்கும் மேற்பட்ட இளைஞர்கள்.!



TVK Party 25 Youngsters Joined

தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளில் பொறுப்புகளில் இருக்கும் நபர்கள் அவ்வப்போது கட்சி தாவுவது இயல்பு. சிலர் பதவிக்காகவும், சிலர் சூழ்நிலைக்காகவும் அம்முடிவில் ஈடுபடுகின்றனர். கொள்கையில் பிடிப்பாக இருப்பவர்கள் ஏற்றத்தாழ்விலும் அதே இயக்கத்தில் துணை நிற்கின்றனர்.

Cuddalore

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள கண்டக்காடு கிராமத்தை சேர்ந்த 25-க்கும் அதிகமான இளைஞர்கள், மாற்று கட்சியில் இருந்து விலகி தங்களை தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தி.கண்ணன் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைத்துக்கொண்டனர். புதிதாக இணைந்தவர்களுக்கு அக்கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.