திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய திருமாவளவன்.! "சமூகநிதி பார்வை." என பாராட்டு.!
நீட் குறித்து விஜய்
த.வெ.க தலைவர் நடிகர் விஜய் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வில் கலந்துகொண்டு இன்று உரையாற்றிய போது அவர், நீட் தேர்வு பற்றி, "தமிழக கிராமத்தில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவ மாணவிகள் நீட் தேர்வால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மிகவும் உண்மை. இது மாநில உரிமைக்கு எதிராக இருக்கிறது. 1975-க்கு முன்பு வரை கல்வி மாநில பட்டியலில் தான் இருந்தது. அதன் பின் மத்திய அரசின் கீழ் வந்தது.
நீட் வேண்டாம் :
ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு என்பது சரியானது இல்லை. மாநிலத்திற்கு தக்க வகையில் பாடத்திட்டம் இருக்க வேண்டும். அதிலும் மருத்துவ படிப்பு மிகவும் கடினமானது. நீட் தேர்வில் நடந்த குளறுபடிகள் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதன் மீதான நம்பகத்தன்மை போய்விட்டது. பொது பட்டியலில் இருந்து கல்வியை நீக்கி மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்.
இதையும் படிங்க: கொண்டாட்டங்கள் வேண்டாம்.. உடனே இதை செய்யுங்க.! கட்சி நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் உத்தரவு.!
திருமா பாராட்டு
மாநில அரசின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு நீட் வேண்டாம். ஜிப்மர், எய்ம்ஸ் போன்ற மத்திய அரசு கல்லூரிகளுக்கு வேண்டுமானால் நீட் தேர்வு நடத்திக் கொள்ளலாம். நீட் தேர்வே வேண்டாம் என்பதுதான் என்னுடைய பரிந்துரை. ஆனால், இதை ஏற்கமாட்டார்கள் என்று பேசியுள்ளார். இந்நிலையில், இது பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், "நடிகர் விஜயின் நீட் தேர்வுக்கு எதிரான கருத்தின் மூலம் அவரது சமூக நீதிப் பார்வை புலப்படுகிறது." என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BigBreaking: "அரசு நிர்வாகத்தின் அலட்சியமே கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு காரணம்" - த.வெ.க தலைவர் விஜய் பகிரங்க குற்றசாட்டு.!