96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பெத்த மனசு எப்படி துடிச்சிருக்கும்!! குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி..
குளத்தில் மீன்பிடிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியபட்டி என்னும் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் அங்கிருந்த குளம் ஒன்றில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இரண்டு சிறுவர்களுக்கும் நீச்சல் தெரியாத நிலையில், நீரில் இறங்கிய சிறிது நேரத்தில் கால் தவறி குளத்திற்குள் விழுந்துள்ளனனர்.
இருவருக்கும் நீச்சல் தெரியாது என்பதால், சிறுவர்கள் இருவரும் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சிறுவர்கள் இருவரின் சடலமும் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி !#Dindigul | #Death | #Fishing pic.twitter.com/qIRLCkfxvK
— Polimer News (@polimernews) January 16, 2022