வாயைப்பிளக்கப்போகும் இந்தியத் திரையுலகம்; கங்குவா படம் குறித்து மனம்திறந்த சூர்யா.!
மது கிடைக்காத விரக்தி! இளைஞர்களின் முட்டாள்தனமான செயலால் 2 பேர் பலி! ஒருவர் கவலைக்கிடம்!
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர, மற்ற அனைத்து கடைகளும் பொது இடங்களும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளான மளிகை மற்றும் காய்கறி கடைகள், குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே இயங்குகின்றன.
சமூக விலகலுக்காக இந்த மாதிரி விஷயங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன இதனால் மது அருந்தும் பலர் செய்வதறியாது இருக்கிறார்கள். டாஸ்மாக் மூடப்பட்டதால் பல பெண்கள் நிம்மதியடைந்துள்ளனர். தற்போது மூடியது மட்டுமல்லாமல் நிரந்தரமாக டாஸ்மாக்கை மூடினால் பல குடும்பங்களுக்கு நிம்மதி என்றும் தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில், புதுக்கோட்டையில் மது கிடைக்காத விரக்தியில் மாற்று வழியில் போதைக்கு உள்ளான இருவர் உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் மீனவர் குடியிருப்பைச் சேர்ந்தவர் அசன்மைதீன் (33), ராமநாதபுரம் பேய்க்கரும்பு பகுதியைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன் (30), கோட்டைப்பட்டினம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அன்வர்ராஜா (34). இவர்கள் மூவரும் மாற்று போதை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏப்ரல் 2ஆம் தேதி பிற்பகலில் ஷேவிங் செய்த பிறகு பயன்படுத்தும் லோஷனை குளிர்பானத்தில் கலந்து குதித்துள்ளனர். இதனையடுத்து ஏப்ரல் 3ஆம் தேதி உடல் நலக்குறைவால் மணமேல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அசன்மைதீன், அருண்பாண்டியன் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனர். இந்தநிலையில் ஐடியா கொடுத்த அன்வர்ராஜா அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.