வீடியோ: உதயநிதி ஸ்டாலின் எனும் நான்!! ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து முதல்முறையாக MLA-வாக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்!!



Udhayanithi stalin became MLA viral video

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்றதை அடுத்து இன்று MLA-வாக பதவியேற்றார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கடந்த 7 ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

stalinstalin

இந்நிலையில் இன்று (மே 11) சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் MLA-வாக பதவியேற்றுக்கொண்டனர். இதில், முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்ற நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் MLA-வாக பதவியேற்றார்.

ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை சட்டை என கம்பீரமாக வந்த உதயநிதி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எனும் நான் என கூறி முதல் முறையாக MLA-வாக பதவியேற்றார். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.