96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தீராத வயிற்று வலி.. தாங்க முடியாமல் பெண் எடுத்த விபரீத முடிவு.!
கடலுார் அடுத்த சோனாங்குப்பத்தில் செல்வமணி தனது மனைவி ஜெயமாலாவுடன் வசித்துள்ளார். இந்நிலையில் ஜெயமாலாவிற்க்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அதனால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று ஜெயமாலாவிற்க்கு வயிற்று வலி அதிகமாக இருந்துள்ளது. இதனால் ஜெயமாலா தன் கணவரிடம் தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு செல்வமணி மீன் பிடித்துவிட்டு வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு கடலுக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து ஜெயமாலாவிற்கு வலி அதிகமானதால் அதனை தாங்க முடியாமல் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் மீன் பிடித்துவிட்டு வீட்டிற்கு வந்த செல்வமணி, ஜெயமாலா தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து கடலுார் துறைமுகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் ஜெயமாலாவின் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கடலூர் துறைமுகம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.