என்னுடன் புகைப்படம் எடுப்பதற்கு பணம் இல்லையா..? தொண்டரை விரட்டிய வைகோ!!



vaiko denies mdmk cadres to take photo


ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் புகைப்படம் எடுத்து கொள்ள 100ரூபாய் செலுத்த வேண்டும் என்று மதிமுக கட்சி நிர்வாகம் கேட்டு கொண்டிருந்தது. மேலும், வைகோவிற்கு சால்வே அணிவிக்க வேண்டாம் என்றும் பதிலாக கட்சிக்கு நிதியுதவி வழங்கலாம் என்றும் தெரிவித்திருந்தது.
 
இந்தநிலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் சென்னை-பெங்களூர் தேசிய  நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி பகுதியில் நினைவேந்தல் கூட்டம் ஒன்றிற்கு வைகோ சென்றார். அவருக்கு ஆம்பூர் நகர கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காசு கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர். 

ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே வந்திறங்கிய வைகோவை பட்டாசு வெடித்து ம.தி.மு.க-வினர் உற்சாகமாக வரவேற்றனர். அவருடன் செல்பி எடுக்கப் பலர் முண்டியடித்தனர். போட்டோவுக்கு `போஸ்’ கொடுத்த வைகோ 100 ரூபாயைக் கேட்டு வாங்கி கொண்டார்.

அப்போது தொண்டர் ஒருவர் 100 ரூபாய் இல்லாமல் போட்டோ எடுக்க வைகோ அருகில் சென்றார். அப்போது ''காசு இல்லையா, அப்போ போட்டோ எடுக்க முடியாது'' என கறாராக பேசினார். இதனால் அந்த தொண்டர் வருத்தத்துடன் திரும்பி சென்றார். இந்த சம்பவம் அங்கிருந்த தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.