கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
வானிலை மையம்: தமிழகத்தில் மழை பொழிவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.!
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பருவ காலத்தில் பொழிய வேண்டிய மழை பொய்த்து போகவே விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் கடும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். அனைவரும் மழையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்,
மழை பொழிய வேண்டிய காலத்தில் கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் விவசாயிகள் திக்கு முக்காடி சின்னாபின்னமாகி கொண்டிருக்கின்றனர். டெல்டா மாவட்ட விவசாயிகளின் புலம்பல்களில் இதுவும் ஒன்று, புயல் தாக்கிய அதே வேளையில் கனமழை பெய்திருந்தால் நீர் ஆதாரம் உயர்ந்து இருக்குமே என்று பல இடங்களில் கவலையோடு தெரிவித்தனர்.
இந்நிலையில் மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கும்போது: தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. தமிழகத்தில் 21, 22 ஆகிய தேதிகளில் மழை பெய்யும்.
அதாவது தென் தமிழகத்தின் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையில் வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். அதேசமயம் மழைக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்று தெரிவித்தனர்.