ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
#BigNews: காதலன் உட்பட 8 பேரால் இளம்பெண் பலாத்காரம்.. திமுக நிர்வாகி, 4 சிறார்கள் உட்பட 8 பேர் பரபரப்பு கைது.. நடந்தது என்ன?..!
22 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக நடித்து உல்லாசமாக இருந்த காதலன், திமுக நிர்வாகி உட்பட 7 பேருக்கு அந்தரங்க வீடியோவை பகிர்ந்து காதலியை அனைவரும் பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்த பேரதிர்ச்சி சம்பவம் விருதுநகரில் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் 22 வயது இளம்பெண், பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், " நானும் - விருதுநகர் மேலத்தெருவில் வசித்து வந்த ஹரிஹரன் என்ற இளைஞரும் காதலித்து வந்தோம். சம்பவத்தன்று, அங்குள்ள பெத்தநாட்சி நகர் மருந்து கிடங்கிற்கு என்னை அழைத்து சென்ற ஹரிஹரன், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினார். நாங்கள் தனிமையில் இருந்ததை அவர் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
இந்த விஷயம் எனக்கு சில நாட்கள் கழித்து தெரியவரவே, அவரிடம் வீடியோ குறித்து கேட்டு அதனை நீக்குமாறு தெரிவித்தேன். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த ஹரிஹரன், நான் அழைக்கும்போதெல்லாம் என்னுடன் உல்லாசமாக இருக்க வர வேண்டும். இல்லாத பட்சத்தில், வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறார்.
இதனால் ஹரிஹரன் என்னை உண்மையாக காதலிக்கவில்லை என்ற விஷயம் புரியவந்து மனதளவில் துடித்துக்கொண்டு இருந்த நிலையில், எனக்கு தொடர்பு கொண்டு மிரட்டி என்னை தனியாக வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த வீடியோவை அவரின் நண்பர்களான மாரி, மாடசாமி, கோபி, அகிலன், பிரவீன், பரணி, ஜீனத் அகமது ஆகியோருக்கும் பகிர்ந்து இருக்கிறார்.
இதனை சாதமாக்கிக்கொண்ட அவனது நண்பர்களும் வீடியோவை காண்பித்து மிரட்டினர். மாடசாமி எனது வீட்டிற்கே வந்து தாயிடம் வீடியோவை காண்பித்து என்னிடம் அத்துமீறினான். அதனைப்போல, மாரி, கோபி, அகிலன், பிரவீன், பரணி, அகமது ஆகியோரும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். இவர்களின் மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்னை காப்பாற்றுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பாண்டியன் நகர் காவல் துறையினர், இளம்பெண்ணின் காதலன் ஹரிஹரன் (வயது 27), காதலனின் நண்பர்கள் என 18 வயதுக்கு கீழ் இருக்கும் 4 சிறுவர்கள், ஜுனத் அகமது (வயது 27), பிரவீன் (வயது 22), மாடசாமி (வயது 37) ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஹரிஹரன் மற்றும் ஜுனத் ஆகியோர் திமுக கட்சியில் நிர்வாகிகள் ஆவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
A 22-year-old Dalit woman was reportedly gang-raped by 8 men including two DMK functionaries and four minors in Virudhunagar district of Tamil Nadu. #Save_GirlsfromDMK pic.twitter.com/YDSUBz8rcE
— வெங்கடேசன் வடிவேல் (@Venka8EsanV) March 22, 2022