ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
தென்னகமே பேரதிர்ச்சி.. அந்த வீடியோ..! காதலியை 7 நண்பர்களுக்கு இரையாக்கிய காமக்காதலன்.. இளம்பெண் கண்ணீர் கதறல்.!
காதலியை தனிமையான இடத்திற்கு அழைத்து சென்று அத்துமீறி வீடியோ எடுத்து வைத்த காதலன், தனது நண்பர்களுக்கும் வீடியோவை பகிர்ந்த கொடூரத்தால் 22 வயது இளம்பெண் 8 பேரால் வெவ்வேறு தருணத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. காதல் என்ற பெயரில் அத்துமீறி, காதலன் என்ற கயவனின் பகீர் மிரட்டல், பெண்ணின் கண்ணீர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் 22 வயது இளம்பெண், பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், " நானும் - விருதுநகர் மேலத்தெருவில் வசித்து வந்த ஹரிஹரன் என்ற இளைஞரும் காதலித்து வந்தோம். சம்பவத்தன்று, அங்குள்ள பெத்தநாட்சி நகர் மருந்து கிடங்கிற்கு என்னை அழைத்து சென்ற ஹரிஹரன், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினார். நாங்கள் தனிமையில் இருந்ததை அவர் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
இந்த விஷயம் எனக்கு சில நாட்கள் கழித்து தெரியவரவே, அவரிடம் வீடியோ குறித்து கேட்டு அதனை நீக்குமாறு தெரிவித்தேன். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த ஹரிஹரன், நான் அழைக்கும்போதெல்லாம் என்னுடன் உல்லாசமாக இருக்க வர வேண்டும். இல்லாத பட்சத்தில், வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறார்.
இதனால் ஹரிஹரன் என்னை உண்மையாக காதலிக்கவில்லை என்ற விஷயம் புரியவந்து மனதளவில் துடித்துக்கொண்டு இருந்த நிலையில், எனக்கு தொடர்பு கொண்டு மிரட்டி என்னை தனியாக வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த வீடியோவை அவரின் நண்பர்களான மாரி, மாடசாமி, கோபி, அகிலன், பிரவீன், பரணி, ஜீனத் அகமது ஆகியோருக்கும் பகிர்ந்து இருக்கிறார்.
இதனை சாதமாக்கிக்கொண்ட அவனது நண்பர்களும் வீடியோவை காண்பித்து மிரட்டினர். மாடசாமி எனது வீட்டிற்கே வந்து தாயிடம் வீடியோவை காண்பித்து என்னிடம் அத்துமீறினான். அதனைப்போல, மாரி, கோபி, அகிலன், பிரவீன், பரணி, அகமது ஆகியோரும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். இவர்களின் மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்னை காப்பாற்றுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பாண்டியன் நகர் காவல் துறையினர், பெண்ணின் காதலன் மற்றும் அவனின் நண்பர்கள் என 8 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காதல் என்பதன் பொருள் அன்பில் இருந்து காமமாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டன. பருவ வயதில் எட்டிப்பார்க்கும் காதலை நம்பி வாழ்க்கையை இழக்க வேண்டாம். பெண்கள் சுதாரித்து செயல்படுவது நல்லது. இவ்வாறான பிரச்சனை இருப்பின் காவல் நிலையத்தில் தயங்காமல் புகார் அளிக்க வேண்டும்.