தன் டிரைவரின் நலனையே காக்க முடியாத விஷாலா மக்களின் நலனை காக்க போகிறார்? விஷாலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்



vishal-failed-to-help-his-own-driver

நடிகர் சங்க பொது செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர், என பல்வேறு பதவிகளை வகித்து வரும் நடிகர் சமீபத்தில் மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். 

மக்களுக்கு நல்லது செய்யப்போகிறேன் என்று களத்தில் இறங்கியிருக்கும் நடிகர் விஷால் தன்னிடம் டிரைவராக வேலைபார்த்த நபருக்கு உதவாமல் விட்டதால் அவரின் உயிர் பறிபோயுள்ளது. 

Actor vishal

விஷாலின் கார் ஓட்டுனர் பாண்டியராஜ், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் என மரணம் அடைந்தார். இதுகுறித்து அவருடைய தந்தை கண்ணீர் மல்க அளித்துள்ள பேட்டி பார்ப்பவர்களையே கலங்க வைத்துள்ளது.

நடிகர் விஷாலிடம், கார் டிரைவராக பணியாற்றி வந்த பாண்டியராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக வேலைக்கு வராமல் இருந்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவரால், பெரிய மருத்துவமனைக்கு சென்று சரியான சிகிச்சை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இவருடைய உடல் நிலை பற்றி அறிந்தும் விஷால் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். 

இதுகுறித்து பாண்டியராஜின் தந்தை பேசும்ப் போது, “நடிகர் விஷால் நினைத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். அவரிடம் இருந்து உரிய நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் பாண்டியராஜன் உயிருடன் இருந்திருப்பார்.” என கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். 

Actor vishal

ஊருக்கெல்லாம் ஓடி போய் உதவுவதாக கூறி வரும் விஷால், தன்னிடம் வேலை பார்த்த ஒருவர் உயிருக்கு போராடி வருவது தெரிந்தும், அவருடைய உயிரை காப்பாற்ற உரிய நேரத்தில் உதவாமல் இருந்ததை சமூக வலைத்தளத்தில் பலர் விமர்சித்து வருகிறார்கள்.