96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்.!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே வருவதால் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிக்கும் விதமாக திரையரங்குகள் மற்றும் பேருந்து போன்றவற்றை அரசு இன்று வரை திறக்க அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை வெளியிட்டது. அதனை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். ஆனால் அதற்கு எந்த ஒரு பதிலையும் அரசு தெரிவிக்கமாலும், திரையரங்கை திறக்க அனுமதி வழங்காமலும் இருந்து வந்தது.
திரைத்துறையை பொருத்தவரையில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளித்திரை படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?, திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்? என்பது குறித்த பல கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். திரையரங்குகளை திறப்பது குறித்து மத்திய அரசு வரும் செப்டம்பர் 1ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதில் மத்திய அரசிடம் ஆலோசனை செய்து, மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.