அடுத்த அபிராமி!. கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கொன்று இரவு முழுவதும் உல்லாசம் அனுபவித்த மனைவி!.



wife killed husband by illegal relationship

தன் கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனை கொடூரமாக கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் மனைவி நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் மற்றும் இவரது மனைவி ரம்யா. கடந்த இரு தினங்களுக்கு முன்பு உணவு வாங்கி வருமாறு ரம்யா அருண்குமாரை கடைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கடைக்கு சென்ற அருண்குமார் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

பின்னர் மறுநாள் அப்பகுதியில் உள்ள முட்புதர் ஒன்றில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. மேலும்இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது அருண் குமாரின் மனைவி ரம்யா மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அதனால் அவருடைய செல்போன் எண்ணை ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது அவர் தாமஸ் என்ற நபருடன் தொடர்ந்து பேசியது தெரியவந்துள்ளது. பின்னர் தாமஸிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது ரம்யாவுக்கும் தாமஸ் மூலம் தகாத உறவு இருப்பது தெரிய வந்தது.

இதனால், அருண்குமார் ரம்யாவை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த ரம்யா கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவனை கொலை செய்ய, தாமஸுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். பின்பு தனது நண்பர்களான இருவருடன் சேர்ந்து அருண்குமாரை கொன்றுள்ளனர்.

 பின்னர் இதுகுறித்து ரம்யாவிடம் தெரிவித்து அதை கொண்டாடும் விதமாக இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் கொலை செய்த 5 பேரையும் கைது செய்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.