Mid Week Eviction: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஷாக் செய்தி.. மிட் வீக் எவிக்சன் அறிவிப்பு.!
சாமியாருடன் உல்லாசம்! 5 வருடம் கழித்து வீடு திரும்பிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.
காரைக்குடி அருகே உள்ள பெரியார் நகர் சாய் பாபா காலனியை சேர்ந்தவர் மணிமுத்து. 51 வயதாகும் இவர் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்துவந்துள்ளார். கடந்த 5 வருடமாக ஊருக்கு வராத இவர் சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
தன் கணவன் ஊரில் இல்லாத நேரத்தில் அவரது மனைவி பூமி அந்த பகுதியில் குறி சொல்லும் சாமியார் ஒருவருடன் கள்ள தொடர்பில் இருந்துள்ளார். மணிமுத்து ஊருக்கு திரும்பியதும் அவரது உறவினர்கள் மனைவியின் நடத்தை பற்றி அவரிடம் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணிமுத்து தனது மனைவியை அழைத்து கண்டித்துள்ளார். தனது கணவனுக்கு விஷயம் தெரிந்துவிட்டதை உணர்ந்த பூமி சாமியாருடன் சேர்ந்து தனது கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அவரை கொலை செய்துள்ளார்.
ஒருவழியாக பூமிதான் தனது கணவரை கொலை செய்ததை கண்டுபிடித்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்ததில் அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வேல்முருகன் என்ற அந்த சாமியார் 15 வருடத்திற்கு முன்பு தனது ஊருக்கு குறி சொல்ல வந்ததாகவும், அவரை பார்த்ததும் பிடித்துவிட்டதால் அவருடன் தான் உறவில் இருந்ததாகவும், அவர் அவ்வப்போது வந்துசெல்ல தனியே வீடு எடுத்து தங்கியிருந்ததாகவும் கூறியுள்ளார்.
தங்கள் உறவு தனது கணவனுக்கு தெரிந்துவிட்டதால் சாமியாரிடம் கூறி அவரை கொள்ள சொன்னதாகவும், சாமியார் சுடுகாட்டில் வேலைசெய்யும் சிலருடன் இரவில் பூஜை செய்துவிட்டு தங்கள் வீட்டிற்கு வந்தததாகவும், மொட்டை மாடியில் படுத்திருந்த அவரை பல இடங்களில் குத்தி கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.
கள்ள தொடர்பு காரணமாக கட்டிய மனைவியே கணவனை கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.