Mid Week Eviction: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஷாக் செய்தி.. மிட் வீக் எவிக்சன் அறிவிப்பு.!
கெஞ்சிய கணவன்! கதற கதற அந்த உறுப்பை அறுத்து வீசிய மனைவி! நெஞ்சை உலுக்கும் கொடூரம்.
மதுரை மாவட்டம் சீட்டாலாட்சி நகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர் தனது மனைவி சுபாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மனைவியை பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில் ரஞ்சித்துக்கு வேறொரு பெண்ணுடன் தொடர் இருந்ததாக கூறப்படுகிறது.
தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிந்த அவரது மனைவி சுபா தனது ஆண் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தனது கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனை அடுத்து ரஞ்சித் குமார் வீட்டுக்குள் புகுந்த சுபா மற்றும் அவரது ஆண் நண்பர்கள் ரஞ்சித்தை சரமாரியாக வெட்டியதோடு அவரது ஆண் உறுப்பையும் வெட்டி வீசியுள்ளனர்.
ரஞ்சித் வலியால் துடித்ததையும் கண்டுகொள்ளாமல் சுபா அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இதனையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஞ்சித் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சுபா மற்றும் அவருக்கு உதவிய ஆண் நண்பர்களை தேடி வருகின்றனர். கட்டிய மனைவியே கணவனை வெட்டி கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.