"காதலுக்காக தாயை விட்டுட்டியே.." காதலன் வீட்டு வாசலில் விஷமருந்திய தாய்.!!
தஞ்சாவூர் அருகே மகள் காதலித்த இளைஞனுடன் வீட்டை விட்டு ஓடி சென்றதால் மன வருத்ததிலிருந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொந்தக்கார இளைஞருடன் காதல்
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மனைவி விஜயலதா. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் இவர்களது மகள் உறவுக்கார இளைஞரை காதலித்து வந்திருக்கிறார். அவரது காதலுக்கு ரெங்கசாமி மற்றும் விஜயலதா எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகள்
தங்களை பிரித்து விடுவார்கள் என்று பயந்த அவர்களது மகள் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதன் காரணமாக ரெங்கசாமி மற்றும் அவரது மனைவி விஜயலதா ஆகியோர் கடும் மனவருத்தத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் மகளை அழைத்து வருகிறேன் எனக் கூறிய விஜயலதா தனது உறவுக்காரர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
இதையும் படிங்க: காதலிப்பதாக நாடகம்... 15 வயது சிறுமி கற்பழிப்பு.!! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.!!
வீட்டின் முன் தற்கொலை
ஆனால் அவர்களது வீடு பூட்டப்பட்டிருந்தது. இது விஜயலதாவிற்கு மேலும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து விரக்தியின் உச்சத்திற்கே சென்ற அவர் விஷம் அருந்தி அந்த வீட்டின் வாசலிலேயே தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இந்தத் தகவலறிந்த ரெங்கசாமி மற்றும் அவரது மகன் விரைந்து சென்று விஜயலதாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர் விஜயலதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் காதலனுடன் ஓடி சென்றதால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "உன் பொண்டாட்டி கிட்ட போட்டு கொடுக்கிறேன் இரு.." கள்ளக்காதல் விவகாரம்.!! கோர முடிவு.!!