3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
சாலையில் நடந்து சென்ற பெண்.. லாரி மோதி துடிதுடிக்க ஏற்பட்ட சம்பவம்.!
திருவள்ளூர் அருகே பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவர் பூந்தமல்லி-பாரிவாக்கம் சாலை சந்திப்பு, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து ரேவதி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த ரேவதி மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் பலத்த காயமடைந்தார்.
இதனையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் ரேவதியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை கைது செய்தனர்.