இறந்த மாமியார் அழைத்ததாக மருமகள் எடுத்த அதிர்ச்சி முடிவு.. கதறும் குடும்பத்தினர்!
இறந்த மாமியார் அழைத்ததாக மருமகள் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இதில் குபேந்திரன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆனந்தியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
ஆனால், ஆனந்தியின் மாமியார் இருளாகி அவர் மீது மிகுந்த பாசத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த ஆண்டு ஆனந்தியின் மாமியார் இருளாகி உடல் நலக்குறைவால் காலமானார்.
அதன் பின்னர் தனது மாமியார் கனவிலும், நினைவிலும் தோன்றி தன்னிடம் வருமாறு அழைப்பதாக ஆனந்தி அக்கம் பக்கத்தினரிடம் புலம்பி வந்துள்ளார். இதனால், ஆனந்திக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு விட்டதாக குடும்பத்தினர் கோவில்களுக்கு அழைத்து சென்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆனந்தி தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு மாமியாரிடம் செல்ல போவதாக தீக்குளித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.