96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தனியாக நடந்து சென்ற இளம் பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொல்லை.. 2 பேர் கைது!
மறைமலைநகர் அருகே இளம் பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் 27 வயதுடைய பெண் ஒருவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு செங்கல்பட்டில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது இளம் பெண்ணை பின் தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பெண் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு தட்டான் மலை பகுதியில் நேற்று அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில் செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியை சேர்ந்த தினேஷ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.