96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி...” ஓட ஓட கல்லால் அடித்து கொலை செய்த கொடூரன்... சேலம் அருகே பரபரப்பு!!
சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த கூடமலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இரண்டாவது மகள் ரோஜா தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பாக கடம்பூர் பகுதியைச் சேர்ந்த சாமிதுரை என்ற வாலிபர் ரோஜாவை காதலிப்பதாக கூறி கல்லூரி பேருந்தை மறித்து ரகளை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து ரோஜா தனது குடும்பத்தில் கூறியுள்ளார்.
அதனையடுத்து ரோஜாவின் குடும்பத்தினர் சாமிதுரையை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால் பயங்கர கோபத்தில் இருந்த சாமிதுரை வீட்டில் உறவினர்கள் யாரும் இல்லாத நேரமாக பார்த்து ரோஜாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு ரோஜாவிடம் எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது என கூறி பெட்ரோல் ஊற்றி கொழுத்த முயற்சித்துள்ளார். உடனே ரோஜாவின் சகோதரி தண்ணீரை எடுத்து ஊற்றியதும் அதிலிருந்து தப்பித்து ஓடியுள்ளார் ரோஜா.
சாமிதுரையும் விடாமல் துரத்தி சென்று ரோஜாவை கல்லாலே தலையில் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சாமிதுரையை தேடி வருகின்றனர்.